📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 10:04 PM

அரிசி முதல் எண்ணெய் வரை | ஒரே ஆண்டில் விலை இரட்டிப்பான 41 பொருட்கள்.. அதிர்ச்சியில் குடும்பங்கள்!

அரிசி முதல் எண்ணெய் வரை | ஒரே ஆண்டில் விலை இரட்டிப்பான 41 பொருட்கள்.. அதிர்ச்சியில் குடும்பங்கள்!

அரிசி முதல் எண்ணெய் வரை | ஒரே ஆண்டில் விலை இரட்டிப்பான 41 பொருட்கள்.. அதிர்ச்சியில் குடும்பங்கள்!

அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் 42 அத்தியாவசியப் பொருட்களில் 41 பொருட்களின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் உயர்ந்திருப்பதாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 113% உயர்ந்து, மிகக் கடுமையான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

பயிர்ச் சேதம் மற்றும் சீரற்ற பருவமழை காரணமாக, சில முக்கிய உற்பத்தி மாநிலங்களில் விளைபொருட்களின் வரத்து குறைந்தது. இதனால் சந்தை விலையில் அதன் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தவிர, அக்டோபர் மாத பண்டிகைக் காலத்தையொட்டி உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்க்கான நுகர்வுத் தேவை அதிகரித்து வருவதால், இந்த விலை தாக்கம் தொடர்கிறது. அந்த வகையில், அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் 42 அத்தியாவசியப் பொருட்களில் 41 பொருட்களின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் உயர்ந்திருப்பதாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 113% உயர்ந்து, மிகக் கடுமையான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

மேலும் சாதாரண அரிசியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.47 ஆக இருந்த நிலையில், கிட்டத்தட்ட 12% உயர்ந்துள்ளது. சர்க்கரையின் விலையும் 22% அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளில், துவரம் பருப்பு, ஓராண்டுக்கு முன்பு கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.129 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடலைப்பருப்பும் ஓராண்டுக்கு முன்பு ரூ.85 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.91 ஆக அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய்களில், சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.191-ஐ எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட 18% அதிகமாகும். இதைத் தொடர்ந்து, பாமாயில் 15.2% மற்றும் சோயா எண்ணெய் 14.6% உயர்ந்துள்ளன. ஓராண்டுக்கு முன்பு லிட்டருக்கு ரூ.188 ஆக இருந்த கடுகு எண்ணெய் விலையும், தற்போது ரூ.204 ஆக உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்களின் இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நேரடியாகப் பாதித்துள்ளது. அதேநேரத்தில், நாட்டின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவுப் பணவீக்கம் 7.74 சதவீதமாக அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இன்னொரு புறம், நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில், சாகுபடிப் பரப்பு குறைக்கப்பட்டதாலும், பருவமழை தாமதமானதாலும், காரிஃப் பருவத்தில் 5-7% சரிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.