📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 01, 2026 08:04 PM

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு; தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை ஐகோர்ட்

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு; தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.

அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள், ஆளும் தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால், 6 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது. இது குறித்து புகார் மனுக்களையும், சபாநாயகரிடம் அதிமுக வழங்கி உள்ளது.

6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த தருணத்தில், அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இசக்கி சுப்பையா மனு