📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 11:03 PM

சட்டசபையில் திமுக தரப்பில் தவறான கருத்து; ஆதாரத்தைக் காட்டியவுடன் திரும்பப் பெற்றார் உதயநிதி

சட்டசபையில் திமுக தரப்பில் தவறான கருத்து; ஆதாரத்தைக் காட்டியவுடன் திரும்பப் பெற்றார் உதயநிதி

சென்னை: சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, தி.மு.க., தரப்பில் தெரிவித்த கருத்தை, திரும்ப பெறுவதாக, தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு, சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பேசிய, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, “110 விதியின் கீழ், சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

அப்போது நடந்த விவாதத்தில், 'எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர், 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிடவில்லை' என, தெரிவித்தேன்.''பழைய சபை குறிப்புகளை, சபாநாயகர் எடுத்து காண்பித்துள்ளார்.

''அதில், 110 விதியின் கீழ் தான், அந்த அறிவிப்புகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதனால், நாங்கள் சொன்ன கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.

இதையடுத்து, சபாநாயகர் பிரபாகர், ''எதிர்க்கட்சி தலைவரிடம், ஆதாரத்தை நான் காண்பித்ததும், அவர் சொன்ன கருத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். அந்த பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன்,'' என தெரிவித்தார்.