📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 26, 2026 04:33 PM

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரம்; வரும் 30ம் தேதி மீண்டும் விசாரணை

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரம்; வரும் 30ம் தேதி மீண்டும் விசாரணை

நமது நிருபர்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்களாக வெற்றி இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பின்னர் 4 பேரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்து 4 பேர் மீண்டும் ஜூலை 30ல் விளக்கம் அளிக்க உள்ளனர்.

அதேபோல், அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் ஜூலை 30ம் தேதி நேரில் ஆஜராகி, அதிமுக தரப்பு விளக்கத்தை அளிக்க இபிஎஸ்க்கு சட்டசபை செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு எம்எல்ஏக்களிடமும் 30 நிமிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிமுக கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.