📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 12:05 AM

“கொத்து புரோட்டா போட்டுவிட்டேன், Dash Dash என்று முதல்வர் மிரட்டியது..”

“கொத்து புரோட்டா போட்டுவிட்டேன், Dash Dash என்று முதல்வர் மிரட்டியது..”

“கொத்து புரோட்டா போட்டுவிட்டேன், Dash Dash என்று முதல்வர் மிரட்டியது..”- அப்பாவு

பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி MLA ஒருவர் முதல்வரை மிரட்டும் தொனியில் பேசி உள்ளது பேரவை சம்பந்தப்பட்ட விஷயம் என்று அவை உரிமை குழுவுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேரவைக்குள் வைத்து‌ பூட்டுவேன் என்றும் கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்றும், Dash Dash என்று முதல்வர் பேரவைக்கு வெளியே மிரட்டியதும் அவை உரிமை குழுவுக்கு அனுப்புவது தான் சட்டமன்ற மாண்பு என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “சட்டப்பேரவை மாண்பு காக்கப்பட வேண்டும்:

2021-ல் திமுகழகம் ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் #முகஸ்டாலின் அவர்கள் ஆலோசனைப்படி பேரவை சார்பாக பல மாநில சட்டமன்றங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்தபின் கேள்வி நேரமும், முக்கிய நிகழ்வுகளும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலுறைகளும் பேரவை விதிகள், மரபுகளுக்குட்பட்டு பேரவையின் மாண்போடு முதன்முதலில் சட்டமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டது. மேலும் திமுகழக ஆட்சியில்தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினி வழங்கப்பட்டு காகிதமில்லா சட்டமன்றம் உருவாக்கப்பட்டது வரலாறு. 1921 முதல் 2021 வரை சட்டமன்ற பதிவுகள் அனைத்தும் Online-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகின் எந்த மூலையில் இருந்தும் சட்டமன்ற பதிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ததும் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் என்பதுதான் சட்டமன்ற வரலாறு.

சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்தால், ஏதேனும் உறுப்பினர்கள் தவறுதலாக ஒரு கருத்தை பேசி அதன் மூலம் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுவிட‌க் கூடாது என்பதற்காக நேரலையை 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம் என்றும் இது குறித்து எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சியும் வழங்கி முகஸ்டாலின் 2.0 ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டும் என்பது தான் கடந்த திமுக ஆட்சியின் நோக்கம். தற்போது அமைச்சர்கள் சட்டமன்றத்தில் மரபு மீறி பேசும் வார்த்தைகளை பேரவை தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்த பின்பும், ஆளும் கட்சி நிர்வாகிகள் ரீல்ஸ் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுவதை தடுப்பதற்காகவே 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று திமுகழக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி MLA ஒருவர் முதல்வரை மிரட்டும் தொனியில் பேசி உள்ளது பேரவை சம்பந்தப்பட்ட விஷயம் என்று அவை உரிமை குழுவுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேரவைக்குள் வைத்து‌ பூட்டுவேன் என்றும் கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்றும், Dash Dash என்று முதல்வர் பேரவைக்கு வெளியே மிரட்டியதும் அவை உரிமை குழுவுக்கு அனுப்புவது தான் சட்டமன்ற மாண்பு. 6 அதிமுக MLA-க்கள் ராஜினாமா விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது என்றால் திமுக MLA பேசிய விஷயமும் நீதிமன்றத்தில் இருக்கிறது என்று இரண்டையும் ஒரே நிலையில் பார்ப்பதற்கு பதிலாக ஒன்றை ஏற்பதும் மற்றொன்றை நிராகரிப்பதும் பேரவை மாண்பல்ல. எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்ற பொது நலம் சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதில் அளிக்க இயலாமல் வரம்பு மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை வம்புக்கு இழுக்கும்போது எதிர்கட்சியினர் பயன்படுத்தும் வார்த்தைகள் மட்டும் பூதாகரமாக்கப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.