Bigg Boss 10 Tamil : ஐயோ இவரா ? ரசிகர்கள் எதிர்பார்க்காத முதல் எவிக்ஷன் !
Bigg Boss 10 Tamil : ஐயோ இவரா ? ரசிகர்கள் எதிர்பார்க்காத முதல் எவிக்ஷன் !
பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ல் முதல் எவிக்ஷன் பரபரப்பு... எதிர்பாராத போட்டியாளர் வெளியேறியதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களே ஆன நிலையில், வீட்டிற்குள் முதல் எலிமினேஷன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் நடைபெறும் எவிக்ஷன் முறை இந்த சீசனில் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளதால், போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சீசன் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கியது. நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே பிளாக் பாண்டி உடல்நலக் காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவருக்கு மாற்றாக காமன் மேன் பிரிவில் இருந்து மணிவண்ணன் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கினார். பின்னர் இரண்டாவது வாரத்தில் ஆனந்தியும் வைல்டு கார்டு மூலம் வீட்டுக்குள் வந்தார்.
புதிய முறையில் நடைபெற்ற எவிக்ஷன் :
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில், மக்கள் குறைந்த வாக்குகள் அளித்த போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த சீசனில் எவிக்ஷன் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வீட்டின் கேப்டனாக இருக்கும் போட்டியாளர், டாஸ்க்களில் சரியாக செயல்படாத மூன்று போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த மூவரில் யார் வெளியேற வேண்டும் என்பதை சக போட்டியாளர்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்கிறார்கள்.
இந்த முறையில் கடந்த வாரம் சாவின்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியனார்.
இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் யார்?
இந்த வார கேப்டனாக இருந்த ஷமா, டாஸ்க் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஜாவித், ஜேசன் கெளஷி மற்றும் அஷ்மிதா ஆகிய மூன்று போட்டியாளர்களை எலிமினேஷன் பட்டியலில் சேர்த்திருந்தார்.
இவர்களில் சக போட்டியாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஜாவித் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் தனது திறமையை நிரூபித்து தனக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற கனவுடன் வந்த ஜாவித்தின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் எழும் கேள்விகள் :
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் பெரும்பாலும் மக்கள் வாக்குகளே எவிக்ஷனில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் இந்த முறை போட்டியாளர்களின் வாக்குகள் மூலம் எலிமினேஷன் நடைபெறுவது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புதிய நடைமுறை தொடர வேண்டுமா அல்லது மீண்டும் மக்கள் வாக்கு முறைக்கு திரும்ப வேண்டுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இன்னொரு எலிமினேஷன் இருக்குமா?
ஜாவித்தின் வெளியேற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸ் 10 ஆரம்பித்த சில வாரத்திலேயே Double Eviction என்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வார இறுதி நிகழ்ச்சியில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ல், ஆரம்ப வாரங்களிலேயே எதிர்பாராத திருப்பங்கள் உருவாகி வருவதால், அடுத்தடுத்த எபிசோட்கள் மீது ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது.