சாப்பாட்டுல கை வச்ச அன்சார்.. பொங்கி எழுந்த ஷாதிகா.. பிக் பாஸ் வீட்டில் புது வைல்டு கார்டு!
சென்னை: பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசனில் தினமும் அடுத்தடுத்து நடக்கும் சண்டைகளும் எலிமினேஷன்களும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் என 19 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்த சீசனில், பிளாக் பாண்டி உடல்நலக் குறைவால் வெளியேற அவருக்கு பதிலாக வந்த காமன் போட்டியாளர் மணிவண்ணன் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். சகோதரியின் மறைவை கூடத் தாங்கிக்கொண்டு உறுதியுடன் விளையாடிய மணிவண்ணனின் வெளியேற்றம் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிச்சனில் வெடித்த சண்டை: இந்த வாரத்தின் புதிய கேப்டனாக அவினாஷ் தேர்வாகி டீமை பிரிப்பதற்காக ஜனநாயக் அறையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், ஜனநாயகன் அறையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதையடுத்து, பிக் பாஸ் வீட்டின் கிச்சனில் சாப்பாட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கிச்சன் டீமில் இருக்கும் அடாவடி அன்சார், கப்பில் அளந்து கொடுக்கும் சாப்பாட்டை கூடச் ஒழுங்காக தருவதில்லை என ஷாதிகா கொந்தளித்து பிரச்சனை செய்தார். நீ ஒன்னும் எனக்கு சாப்பாடு போடல... பிக் பாஸ் தான் தர்றாரு என கத்தி ஆவேசமடைந்த ஷாதிகா, அதன்பின் சாப்பிடவே மாட்டேன் என அடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்களும் அன்சார் மீது இதே குற்றச்சாட்டை வைத்து வீட்டில் பெரிய பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.
கரிஷ்மா என்ட்ரி: வீட்டில் சாப்பாட்டு பிரச்சனையும் மணிவண்ணனின் எலிமினேஷனும் ஒருபக்கம் சூடேற்ற, பிக் பாஸ் வீட்டை மேலும் அதிர வைக்கும் வகையில் புதிய வைல்டு கார்டு என்ட்ரி நடந்துள்ளது. காமன் போட்டியாளரான கரிஷ்மா புதிய வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸாக நுழைந்துள்ளார். அதுமட்டுமன்றி, முதல் நாள் மேடையில் இருந்தே எலிமினேட்டாகி வெளியேறிய 10 போட்டியாளர்களும் மீண்டும் வைல்டு கார்டு மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.