📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 03:33 PM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டம்..!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டம்..!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டம்..!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் கருப்பு பேஜ் அணிந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை (ஒரு மணி நேரம்) பணியை புறகணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேஜ் அணிந்து தொடர் கவன ஈடுபட்டனர்

1.(Re-Deployment) ஆட்குறைப்பு அரசைணை 204 - ஐ ரத்து செய்ய கோரியும்

2.தொகுதிப்பூதிய முறையை ரத்து செய்து செவிலியர்களை பணி நிரந்தம் செய்திட கோரியும்

3.செவிலியர் அலுவலர் (Nursing officer) என பெயர் மாற்றம் செய்து பணி வரன்முறை அரசைணை வழங்கிட கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது அதை நிறப்பிட வேண்டும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஐந்து ஆண்டுகள் பதியாற்றினால் பணி நிரந்தம் செய்வதாக கூறிய நிலையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் 1000 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 200 செவிலியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் எனவே தமிழகம் முழுவதும் காலி பணியிடங்களை உடனே நிறப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்றும் நாளையும் காலை 7 மணி முதல் 8 மணி வரை (ஒரு மணி நேரம் மட்டும்) பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.