📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 28, 2026 08:04 AM

செஞ்சுரி அடித்த கோலி, கில்லுக்கு ஒண்ணுமில்ல... 4 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்டநாயகன் விருது!

செஞ்சுரி அடித்த கோலி, கில்லுக்கு ஒண்ணுமில்ல... 4 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்டநாயகன் விருது!

செஞ்சுரி அடித்த கோலி, கில்லுக்கு ஒண்ணுமில்ல... 4 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்டநாயகன் விருது!

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா ஒரு சதம் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். ஆனாலும் அவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார். பேட்டர்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் பந்துவீச்சாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டது ஏன்? விராட் கோலி 139 ரன்கள் நிலையில் அவருக்கு தானே ஆட்டநாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால், குல்தீப் யாதவுக்கு விருது வழங்கப்பட ஒரு முக்கிய காரணம் உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் குவித்தது. ஜஸ்டின் க்ரீவ்ஸ் 101 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து ஆடிய இந்திய அணி 41.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் விளாசினர்.

குல்தீப் யாதவுக்கு விருது கிடைத்தது ஏன்?

திருவனந்தபுரம் மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஒரே நாளில் இரு அணிகளும் சேர்ந்து 595 ரன்களை குவித்தன. மூன்று பேட்டர்கள் சதம் அடித்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 6 முதல் 9 ரன்கள் வரை வாரி வழங்கிய நிலையில், குல்தீப் யாதவ் மட்டுமே ஓவருக்கு வெறும் 4 ரன்கள் வீதம் கொடுத்து 10 ஓவர்களில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும், 34 டாட் பால்களும் அடங்கும். திருப்புமுனை பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 135 ரன்கள் குவித்து முதலில் ஆதிக்கம் செலுத்தியது. 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் தொடக்க வீரர்கள் கூட்டணியை உடைத்தவர் குல்தீப் தான். 62 ரன்கள் எடுத்த கேம்ப்பல்லை வெளியேற்றிய அவர், அடுத்தடுத்து ஷாய் ஹோப், சதம் அடித்த க்ரீவ்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ ஆகிய 4 முக்கிய விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் சாய்த்தார்.

குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் எளிதாக 340 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும். அது இந்திய அணிக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்திருக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 295 ரன்களுக்குள் சுருட்டியதே இந்திய பேட்டர்கள் நிதானமாகவும் சுதந்திரமாகவும் விளையாட முக்கிய அடித்தளமாக அமைந்தது.

பொதுவாக ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கும் பேட்டர்களுக்கே ஆட்டநாயகன் விருது செல்வது வழக்கம். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு சவாலான ஆடுகளத்தில், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றிய குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சை பாராட்டி அவருக்கு ஆட்டநாயகன் விருதை வழங்கினர்.