📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka June 02, 2026 07:00 AM

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

சென்னை மதுபான பாரில் பிரச்னை: இலங்கையைச் சேர்ந்த பெண் கொலை.

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்றுள்ளார்.

சுமன் சக்திவேல் என்பவர் அவரது நண்பர்களுடன் அதே பார்க்கு சென்றுள்ளார்.

இந்த இரண்டு குழுவினருக்கும் பாரில் நடனமாடும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது தகராறாக மாற, இரண்டு குழுவினரையும் பவுன்சர்கள் பாரில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

பார்க்கு வெளியேயும் தகராறு தொடர்ந்துள்ளது. இதனால், அங்கிருந்து பவுன்சர்கள் இரண்டு குழுவினரையும் அனுப்பியுள்ளனர்.

யான்சி அவரது தோழிகளுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். தனது காரில் கிளம்பிய சுமன் சக்திவேல், யான்சியையும், அவரது தோழிகளையும் ஃபாலோ செய்து மோதியுள்ளார்.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவருடன் சென்ற சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவத்திற்குப் பிறகு, 'மாட்டிக்கொள்வோம்' என்று சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கோயம்பேடு பூண்டு மார்க்கெட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இருந்தும், சுமன் சக்திவேல் உள்ளிட்ட சம்பவத்தில் தொடர்புள்ள 7 பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

மேலும், அந்தத் தனியார் மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.