📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 03, 2026 11:32 AM

Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்

Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்

Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

Chennai power cut (03-08-2026)): சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் (ஆகஸ்ட் 03, 2026, திங்கட்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

அம்பத்தூர் துணை மின் நிலையம்

கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்டிஎச் சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயல் சாலை.

அடையாறு துணை மின் நிலையம்

இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வஊசி நகர் ஒன்றாவது தெரு முதல் நான்காவது தெரு வரை, ஜோஷ்னா பிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி பிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் பிளாட்ஸ்.

தாம்பரம் துணை மின் நிலையம்

பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி