சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை!
சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது.2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கு விற்பனையானது. வெள்ளியை பொறுத்தவரை 7வது நாளாக நேற்றும், மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.