📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 15, 2026 11:34 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அந்தவகையில், நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கும் விற்றது.

கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதேபோல நேற்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து கிலோ ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n