சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?
தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.280-ம், பவுனுக்கு ரூ.2,240-ம் எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 480-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 840-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.270-ம் பவுனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக் கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை இந்த மாதத்தில், அதாவது கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையில் கிராமுக்கு ரூ.530-ம், பவுனுக்கு ரூ.4,240-ம் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை