சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,13,200
சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,13,200-க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து 1,13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து உயர தொடங்கியது. அதாவது, கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை என தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.6,120 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து இருந்தது. இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.14,250க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து 1,13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.