சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.990.50 அதிகரிப்பு
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.990.50 அதிகரிப்பு
மாதத்தின் முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
Published : May 1, 2026 at 1:26 PM IST
புதுடெல்லி: சென்னையில் 19 கிலோ எடைக்கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை 990.50 ரூபாய் உயர்த்தப்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீடித்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு நாள்தோறும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்ந்தாலும் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை நம் நாட்டில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 01) 19 கிலோ எடைக்கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The retail prices of petrol, diesel, and domestic LPG (14.2 kg cylinders) have remained unchanged, fully insulating domestic consumers from the recent increase in international fuel prices. No change in prices of domestic LPG (14.2 kg) for 33 crore domestic LPG consumers. No…
இதன்படி, டெல்லியில் வணிகப் பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை 3,071.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,246.50 ரூபாயில் இருந்து 3,237 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து டெல்லியில் மார்ச் 1-ம் தேதி 144 ரூபாயும், ஏப்ரல் 1-ம் தேதி 200 ரூபாயும் வணிகப் பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகபட்சமாக ரூபாய் 993 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் உணவகங்கள், டீக்கடைகள், பலக்காரக்கடைகள், பேக்கரிகளில் உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களில் ஏற்கெனவே விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Prices of 19 KG Commercial cylinder has been increased by Rs 993 from today. A 19 Kg cylinder will cost Rs 3071.50 in Delhi from today. No change in domestic cylinder prices: Sources
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சர்வதேச அளவில் எரிப்பொருட்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல், 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோகக் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி இருப்பதால் உள்நாட்டு நுகர்வோர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.