📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 24, 2026 03:03 PM

சிங்கப்பூர்: எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்து தயாரிப்பு

சிங்கப்பூர்: எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்து தயாரிப்பு

சிங்கப்பூர், சளிக்காய்ச்சலுக்கான புதிய எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்துகளின் தயாரிப்பிற்கும் உற்பத்திக்கும் ஆதரவளிக்க முற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்றை எதிர்கொள்ள நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்தவும் அடுத்து உருவாகக்கூடிய கடுமையான தொற்றிலிருந்து தப்பிக்கவும் அது பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.

புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்க ஹிலமன் லபோரட்டரிஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து சுகாதார அமைச்சு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அமைப்பு, சிங்கப்பூரில் அதன் தலைமையகத்தையும் உற்பத்தி வசதியையும் கொண்டுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவலைப் பெரியளவில் கட்டுப்படுத்த எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்து மிக முக்கிய பங்கு வகித்தது.

அத்தகைய தடுப்பு மருந்துகளை உருவாக்கி விநியோகம் செய்யக் கூடுதல் நீக்குப்போக்கும் அவகாசமும் கிடைக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் ஓங் கூறினார்.

எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்து தொழில்நுட்பம், வழக்கமானதைவிட தடுப்பு மருந்துகளை இன்னும் துரிதமாக வடிவமைத்து உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது.

“எம்ஆர்என்ஏ தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தடுப்பு மருந்தைத் தயாரிப்பது பயனளிக்கும் என்று நினைக்கிறேன். எனவே, சளிக்காய்ச்சல் போல அடிக்கடி ஏற்படும் ஒரு நோய்க்குத் தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடிவெடுத்தோம்,” என்று திரு ஓங் சொன்னார்.

பெருந்தொற்றை எதிர்கொள்ள சிங்கப்பூர் 50 விழுக்காடு வரை தயார்நிலையில் உள்ளதாகக் கூறிய அவர், செய்யவேண்டிய பணிகள் இன்னும் அதிகம் இருப்பதைச் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அப்படியென்றால், மிக முக்கியமாகத் தடுப்பு மருந்து உற்பத்தியையும் அதை உருவாக்குவதற்கான வசதியையும் அமைக்கவேண்டும்.

அறியப்படாத நோய்க்கிருமியால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தொற்றுக்கு ‘டிசீஸ் எக்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“புதிய தடுப்பு மருந்தை உருவாக்குவது மிக அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அடுத்த பெருந்தொற்றில் ‘டிசீஸ் எக்ஸ்’ போன்ற நோய்க்கிருமி பரவினால் அதிலிருந்து வெளியேற ஆற்றல்வாய்ந்த தடுப்பு மருந்துதான் ஒரே வழி,” என்று திரு ஓங் விளக்கம் அளித்தார்.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் வேகமாகப் பரவிவரும் அரிதான ‘புன்டிக்புக்யோ’ இபோலா கிருமிக்கு எதிராக, சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட ஹில்மன் லெபோரட்டரிஸ் அமைப்பு, தடுப்பூசிகளை உருவாக்குவதிலும் தயாரிப்பதிலும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமைச்சர் ஓங் சுட்டிக்காட்டினார்.

“ஹில்மன் அமைப்புடனான அந்த முயற்சி நம்மை 60 விழுக்காட்டு இலக்கை நோக்கி எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நம்மால் சளிக்காய்ச்சலுக்கான எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடிந்தால், அந்த இலக்கிற்கு மிக நெருக்கமாகச் செல்ல முடியும் என்று நினைக்கிறேன்,” என்று திரு ஓங் மேலும் கூறினார்.