📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 18, 2026 03:31 AM

சிங்கப்பூர்ச் செல்வந்தருக்குத் தண்டனை விதித்த பங்ளாதே‌ஷ் நீதிமன்றம்

சிங்கப்பூர்ச் செல்வந்தருக்குத் தண்டனை விதித்த பங்ளாதே‌ஷ் நீதிமன்றம்

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற செல்வந்தர் ஒருவருக்குப் பங்ளாதே‌ஷ் நீதிமன்றம் ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நிதித் தொடர்பான குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அந்தத் தண்டனை செல்லாது என்றும் நீதிக்குப் புறம்பானது என்றும் அந்தச் செலவந்தரின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

66 வயது சைஃபுல் ஆலம் மசூத், அவரது 54 வயது மனைவி ஃபர்சானா பர்வீன், அவர்களின் 32 வயது மகன் அசனுல் ஆலம் ஆகிய மூவருக்கும் சாட்டோகிராமில் கடந்த மே மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் பங்ளாதே‌ஷில் உள்ள இஸ்லாமி வங்கியிடமிருந்து வாங்கிய 84.49 கோடி டாக்காவைத் (S$8.8 மில்லியன்) திரும்பத் தராமல் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் சிங்கப்பூரர்கள். சாட்டோகிராமில் பிறந்த அலாமும் அவரது மனைவியும் 2011ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசிகளாகி, பின் 2023ஆம் ஆண்டு குடியுரிமைப் பெற்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரின் வோங் பார்ட்னர்‌ஷிப் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அலாமைப் பிரதிநிதிக்கின்றனர்.

அவர்கள், ஆலம், அவரது மனைவி பர்வீனும், அவர்களின் மகன் அசனுல் ஆலம் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமலேயே தண்டனைகளைப் பெற்றுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

தண்டனை குறித்து ஊடகங்கள்வழியாகத்தான் ஆலம் அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர்கள், முறையாக அறிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையிலும் அவரால் ஈடுபட முடியாமல் போனது என்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“ஆலம் தரப்பின் வாதத்தை முன்வைக்க வாய்ப்பளிக்காமலேயே பங்ளாதே‌ஷ் நீதிமன்றம் தண்டனையை விதித்துவிட்டது,” என்றனர் வழக்கறிஞர்கள்.

பங்ளாதே‌ஷ் வங்கியிடமிருந்து கடன் வாங்கியதாகக் கூறப்படும் ‘ஓஜி டிரேவல்ஸ்’ நிறுவனத்துக்கும் ஆலமின் எஸ் ஆலம் குழுமத்துக்கும் தொடர்பில்லை என்ற அவர்கள், ஆலம் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் அல்ல என்றனர்.

ஆலம் தோற்றுவித்த எஸ் ஆலம் குழுமம், உணவு, உற்பத்தி, எரிசக்தி, போக்குவரத்து, சொத்துச் சந்தை, தொலைதொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தக் குழுமத்தின் தலைவருமான ஆலமும் அவருடன் தொடர்புடையவர்களும் சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றில் ஹோட்டல்களையும் வர்த்தகச் சொத்துகளையும் நடத்துகின்றனர்.