📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 18, 2026 04:30 PM

‘ஏஐ’ மூலம் கைமேல் பலன் பெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்க‌ப்பூர் செய்திகள்

‘ஏஐ’ மூலம் கைமேல் பலன் பெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், திருப்திகரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது, ஊழியர்களின் பணிநேர அட்டவணையை இன்னும் திறம்பட நிர்வகித்தது உள்ளிட்ட பல நன்மைகளைச் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டின் மூலம் பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு தொடங்கிய மின்னிலக்க உருமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் அமைக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு உத்தியை அடையாளம் கண்ட நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங், அதை நிறுவனம் முழுதும் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுத்தார்.

அனைத்துலக அளவில் முன்னணி மின்னிலக்க விமான நிறுவனமாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இதுவரை 550க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 160க்கும் மேற்பட்டவை நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள்மூலம் நிறுவனம் பல்வேறு பயன்களைப் பெறத் தொடங்கிவிட்டது.

வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘கிரிஸ்’ என்ற வாடிக்கையாளர் சேவைத் தளம் பெரிய மொழி மாதிரியுடன் (LLM) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட அந்தத் தளத்தால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்த விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஊழியர்களுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்படுவதால் 30 மணிநேரத்தில் மனிதர்கள் செய்யக்கூடிய வேலைக்குச் சமமான நேரத்தை மிச்சப்படுத்த உதவியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வாடிக்கையாளரின் அனுபவத்தை மேம்படுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையத்தளத்திலும் கைப்பேசி செயலியிலும் ‘ஃபிளைட் ரெக்கமென்டர்’ என்ற அம்சம், வாடிக்கையாளர்களுக்கு உகந்த விமானச் சேவைகளைப் பரிந்துரைக்கிறது.

அதன் மூலம் வாடிக்கையாளர்களால் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை மிச்சப்படுத்த முடிகிறது.