📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 13, 2026 08:01 AM

சிங்டெல் லாபம் 71% சரிவு

சிங்டெல் லாபம் 71% சரிவு

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் 71.6% சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் அந்நிறுவனம் 2.88 பில்லியன் வெள்ளி லாபத்தை ஈட்டியது. இவ்வாண்டு அத்தொகை 818 மில்லியனுக்குச் சரிந்ததாக சிங்டெல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.

சென்ற ஆண்டு முதல் காலாண்டில் ஏர்டெல்லில் தங்களுக்கிருந்த பங்கின் ஒரு பகுதி விற்கப்பட்டதும் இன்டச்-கல்ஃப் எனர்ஜி நிறுவன இணைப்பும் அந்தக் காலகட்டத்தில் அதிக லாபம் பதிவானதற்குக் காரணங்கள் என்று சிங்டெல் குறிப்பிட்டது.