சமையலறைக்கு வரும் பிரபலங்கள்.. சமந்தா நடத்தும் செம ஷோ.. சோனி விழாவில் Celebrity MasterChef !
சென்னை: உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'MasterChef', தற்போது முழுக்க முழுக்கத் தமிழ் உணர்வோடும் சுவையோடும் 'Celebrity MasterChef Tamil' என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகை சமந்தா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
Sony VIZHAவின் முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி இடம்பெறும். மேலும் Sony LIV டிஜிட்டல் தளத்தில் Exclusive குறும்படங்கள் மற்றும் பிரபலங்களின் சமையல் பயணம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சமையலறையில் நிகழும் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.
நடிகை சமந்தா : இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய சமந்தா, இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நான் இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுவகையில் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சி இருக்கிறது. உணவு என்பது மக்களை ஒன்றிணைக்கும், அழகான நினைவுகளை உருவாக்கும், கேமராக்கள் வழக்கமாக நமக்கு காட்டாத நம்முடைய ஒரு பக்கத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஆற்றல் கொண்டது. நமக்கு பிடித்த தமிழ் பிரபலங்கள் சமையலறைக்குள் வந்து புதிய முயற்சிகளை எடுத்து, தவறுகளை செய்து நாம் எதிர்பார்ப்பதைவிட அதிக ஆர்வத்துடன் போட்டியிடுவதைப் பார்க்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன்..
போட்டியாளர்கள் யார்?: யார் யார் சமைக்கப் போகிறார்கள் என்று சொல்ல வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கு, ஆனால், அதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். Sony VIZHA உடன் நாங்கள் என்ன சமைத்து வைத்திருக்கிறோம் என்பதை அனைவரும் பார்க்கலாம். Celebrity MasterChef Tamil விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் வெளியாக உள்ளது மேலும் டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களில் பிரத்யேக உள்ளடக்கங்களும் வெளியாகும் என்றார்.
புது சேனல், புது ஷோ: Sony VIZHA, Sony Pictures Networks Indiaவின் தமிழ் பொழுதுபோக்கு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில்,தமிழ் கலாச்சாரம், கதை சொல்வது, இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் ரசிகர்களுக்காக இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 'விழா' என்ற தமிழ் சொல்லின் கொண்டாட்ட உணர்வை அடிப்படையாகக் கொண்ட Sony VIZHA நிகழ்ச்சியில் reality formats, படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பல தலைமுறை தமிழ் ரசிகர்களுக்காக வழங்கப்பட உள்ளது.