📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 31, 2026 08:04 AM

 சத்தியமூர்த்தி பவனா; விஜய் பவனா?: தி.மு.க.,

 சத்தியமூர்த்தி பவனா; விஜய் பவனா?: தி.மு.க.,

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் பெயரை, 'சத்திய மூர்த்தி பவன்' என்பதற்கு பதில் 'விஜய் பவன்' என மாற்றுமாறு தி.மு.க., கிண்டல் அடித்ததால் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன் வெளியிட்ட அறிக்கை :

த.வெ.க., அரசின் கொள்கை விளக்க குறிப்பில், நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, பா.ஜ.,வின் நிழல் ஆட்சியை த.வெ.க., நடத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா?

முதல்வர் விஜயை போற்றி பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை, 'விஜய் பவன்' என மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த அறிக்கைக்கு, பதிலளித்துள்ள காங்., தமிழக பொருளாளர் ரூபி மனோகரன், 'தி.மு.க., ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த, கொள்கை விளக்க குறிப்புகளில், அம்பேத்கர் பெயர் எங்குமே இல்லை. அப்போது சட்டசபையில் துாங்கிக் கொண்டு இருந்தீர்களா?

'சத்தியமூர்த்தி பவன் பெயரை மாற்ற சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும், நேரு, அம்பேத்கரை கையில் எடுக்கும், தி.மு.க.,வினர், அறிவாலயத்தின் பெயரை என்னவென்று மாற்றப் போகிறீர்கள்? என தெரிவித்துள்ளார்.