📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 12, 2026 02:04 PM

சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை: 17

சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை: 17

தமிழக சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டம்

தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டம் நிறைவடைந்தது.

மானியக் கோரிக்கை விவாதம்

அடுத்து வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.