DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு
DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
DMK MK Stalin: திமுகவில் முன்னாள் அமைச்சர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் உதயநிதியை அப்செட்டாக்கியுள்ளதாம்.
DMK MK Stalin: உதயநிதி முன்வைத்த இளைஞர்களுக்கான வாய்ப்பு என்ற கோரிக்கை, திமுக தலைவர் ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாம்.
திமுகவில் நிகழும் அதிரடி சம்பவங்கள்:
சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் பொறுப்பு குறைப்பு, வயது வரம்பு நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இதுநாள் வரை 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, பல முன்னாள் அமைச்சர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறும் எனவும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது ஒருபுறம் கட்சி நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், உதயநிதி ஸ்டாலினை அப்செட்டாக்கியுள்ளதாம். மறுபுறம் அதிகார பறிப்பு நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
முன்னாள் அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு..!
திமுகவில் அமைப்பு ரீதியாக புதியதாக 33 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதால், பல முக்கிய நிர்வாகிகளும் தங்களது மாவட்ட செயலாளர் கனவு நிறைவேறிவிடும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம், ஒரு மாவட்ட செயலாளருக்கு அதிகபட்சம் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற விதியால், பல முன்னாள் அமைச்சர்கள் தங்களது அதிகாரம் பறிபோவதை பொறுக்க முடியாமல் குமுறி வருகின்றனர். குறிப்பாக சேகர்பாபு வசமிருந்த கொளத்தூர், வில்லிவாக்க, துறைமுகம், எழும்பூர் மற்றும் திரு.வி. நகர் ஆகிய 5 தொகுதிகளில் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சரான மா. சுப்பிரமணியன் வசமிருந்த 5 தொகுதிகளுக்கான பொறுப்பும் தற்போது 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அண்ணா நகர் தொகுதி பறிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்களில் ஒருவரான சிற்றரசுவிற்கும் செக் வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டமும் இரண்டிலிருந்து நான்காக பிரிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவின் அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உதயநிதி அப்செட் என்ன?
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 33 மாவட்டங்களுக்கு இளைஞரணியை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்தாராம். ஆனால், தேர்தல் நடத்தி தான் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கனிமொழி உறுதியாகா இருக்கிறாராம். இதனால் தான் தேர்தல் வாயிலாகவே மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்துள்ளாராம். இந்த அறிவிப்பு உதயநிதியை அப்செட்டாக்கியுள்ளதாம். ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாகும்போது இளைஞரணியை சேர்ந்தவர்கள் மட்டுமே, நாமினேஷன் செய்யவே அதிக வாய்ப்புள்ளதாம்.
இதையும் படியுங்கள்: Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
வெளிப்படையான உட்கட்சி தேர்தல்?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவில் இருந்த காலத்தில் தான் வெளிப்படையாக உட்தேர்தல் நடத்தப்பட்டு அந்த கட்சியில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பெயரளவிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டு தலைமையின் பரிசீலனை அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கூடுதல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதால், பெரும் ஆளுமைகளை தவிர்த்து புதிய நபர்களும் மாவட்ட செயலாளர் பதவியை அடைய ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரம், இளைஞரணி செயலாளர் உதயநிதியின் தீவிரம் மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகளை விட்டுக்கொடுக்க மனமில்லாமல், தங்களுக்கு அடங்கி செயல்படும் நபர்களை மாவட்ட செயலாளர்களாக்க முன்னாள் அமைச்சர்கள் போடும் திட்டம் ஆகியவற்றால், திமுகவின் உட்கட்சி தேர்தல் வெளிப்படையாக நடைபெறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி