📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 30, 2026 04:00 PM

துலீப் கோப்பை 2026: ரஜத் பட்டிதார் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்

துலீப் கோப்பை 2026: ரஜத் பட்டிதார் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்

துலீப் கோப்பை 2026: ரஜத் பட்டிதார் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்

பெங்களூரு: துலீப் டிராபி 2026 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியின் முதல் நாளில் சென்ட்ரல் ஜோன் அணியின் கேப்டன் ரஜத் படிதார், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் பந்துவீச்சில் வினோதமான முறையில் ஆட்டமிழந்தார். சென்ட்ரல் ஜோன் இன்னிங்ஸின் 27வது ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்த விக்கெட் விழுந்தது.

முகேஷ் குமார் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை படிதார் அரைகுறையாக புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து பேட்டின் கீழ் பகுதியில் பட்டு, தரையில் ஒரு முறை குதித்து ஸ்டம்பைத் தாக்கியது. இந்த எதிர்பாராத விக்கெட்டைக் கண்டு ரஜத் படிதார் அதிர்ச்சியடைந்தார். 41 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டுக்குப் பிறகு சென்ட்ரல் ஜோன் அணி 26.5 ஓவர்களில் 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்ட்ரல் ஜோன் அணியின் தொடக்க வீரர்களான அமன் மோக்டே மற்றும் ஆர்யன் ஜூயல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தது. அமன் மோக்டே 29 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது அபிஜித் கே சர்க்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மூன்றாவது வீரராக களம் இறங்கிய குணால் சாண்டிலாவும் 13 பந்துகளில் 6 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். இது அபிஜித் வீழ்த்திய இரண்டாவது விக்கெட்டாகும்.இதன் பின்னர் ஜூயல் மற்றும் ரஜத் படிதார் ஜோடி இணைந்து 86 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாட முயன்ற படிதார் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து முகேஷ் குமாரின் முதல் விக்கெட்டாக மாறினார்.

தற்போதைய நிலவரப்படி, சென்ட்ரல் ஜோன் அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்யன் ஜூயல் 108 பந்துகளில் 44 ரன்கள் மற்றும் யாஷ் ரத்தோட் 30 பந்துகளில் 14 ரன்கள் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் மற்றொரு அரையிறுதி போட்டியில் நார்த் ஜோன் மற்றும் சவுத் ஜோன் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் நார்த் ஜோன் அணி, தற்போதைய நிலவரப்படி 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

கன்ஹையா வாத்வான் 34 பந்துகளில் 13 ரன்கள் மற்றும் கம்ரான் இக்பால் 121 பந்துகளில் 44 ரன்கள் ஆகியோர் விளையாடி வருகின்றனர். சவுத் ஜோன் அணியின் பந்துவீச்சாளர்களான முகமது நிதீஷ், காவூரி சைதேஜா, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் தனாய் தியாகராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.