📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 08, 2026 02:31 PM

ஏர்போர்ட்டில் ரேவதிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. தடுத்து நிறுத்துவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம்!

ஏர்போர்ட்டில் ரேவதிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. தடுத்து நிறுத்துவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ரேவதி கனடாவிற்கு போனால் அவள் திரும்பி வரமுடியாதபடி சாமுண்டீஸ்வரி திட்டம் போட்டு இருப்பது ரோகிணின் மூலம் கார்த்திக்கிற்கு தெரிவருகிறது. இதனால், கார்த்திக் எப்படியாவது ஏர்போர்ட்டுக்கு வந்து ரேவதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பதற்றத்துடன் வேகமாக காரில் வந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் ரேவதி மாமாவிடம் பேச வேண்டும் என ஃபோன் செய்ய சந்திரகலா செய்த சதியால், ரேவதியின் ஃபோன் வேலை செய்யாமல் போய்விடுகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

இன்றைய எபிசோடில், ரேவதி, கார்த்திக் மாமாவிடம் எப்படியாவது பேச வேண்டும் என நினைத்து அங்கிருந்த ஒரு பெண்ணிடம் போனை வாங்கி பேசுகிறாள். அந்த நேரத்தில் போனை கார்த்தியால் எடுக்க முடியாமல் போய்விடுகிறது. பின் கார்த்திக் மிஸ்டுகளை பார்த்துவிட்டு அந்த பெண்ணிடம் விசாரிக்க ரேவதி போன் செய்தது தெரியவர, எப்படியாவது போனை அந்த பெண்ணிடம் கொடுக்கும் படி சொல்கிறான். ஆனால், அந்த பெண்ணால் போனை ரேவதியிடம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதி விமானம் புறப்பட தயாராகிவிட்டது என்ற அழைப்பு வர, ரேவதி செல்லும்போது எதிரே வந்த ஒருவரின் ட்ராலி மீது எதிர்பாராத விதமாக மோதுகிறார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. இதனால், அங்கிருந்தவர்கள் உடனடியாக முதலுதவி அளிக்கின்றனர். அப்போது சிலர், பயணத்திற்கு கிளம்பும் நேரத்தில் இப்படி நடப்பது அபசகுணம் என்று பேச, அதை கேட்டு கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, உங்க வேலையை மட்டும் பாருங்க எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும் என அனைவரையும் திட்டுகிறாள்.

சந்திராவின் பிளான்: மறுபக்கம், ஏர்போர்ட்டில் விமானம் கிளம்ப தாமதமாவதால், கார்த்திக் ஏர்போர்ட்டுக்கு வந்துவிடக்கூடாது என நினைக்கும் சந்திரகலா, சிவனாண்டி போன் செய்து, ரேவதி கன்னடா போகிற வரைக்கும் அந்த கார்த்திக் ஏர்போர்ட்டுக்குவரக்கூடாது அவனை எப்படியாவது தடுத்து நிறுத்து என சொல்கிறாள். இதைக்கேட்ட சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் கார்த்திக் கார் வரும் வழியில் பெரிய பெரிய கற்களை போட்டு அவனை அந்த வழியாக செல்லவிடாமல் தடைகளை உருவாக்குகின்றனர். ஆனால், அனைத்தையும் தாண்டி கார்த்திக் ஏர்போர்ட்டை நோக்கி வந்து கொண்டே இருக்கிறான்

காணாமல் போன பாஸ்போர்ட்: இதற்கிடையில், விமானம் புறப்பட உள்ளதாக அறிவிப்பு ஒலிக்க, ரேவதி உள்ளே செல்ல தயாராகிறார். அப்போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ரேவதியின் பாஸ்போர்ட் காணவில்லை. இந்த விஷயத்தை கேட்டு சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது தான், சந்திரகலாவிற்கு ஒரு விஷயம் ஞாபத்திற்கு ஞாபகத்திற்கு வருகிறது. ரேவதியின் போனை எடுத்த போது பையில் இருந்த பாஸ்போர்ட் கீழே விழுந்தது நினைவுக்கு வருகிறது. உடனே அதை தேடி எடுத்து வருவதாக சாமுண்டீஸ்வரியிடம் சொல்லிவிட்டு அவசரமாக பாஸ்போர்ட்டை தேடி ஓடுகிறாள் சந்திரகலா. இப்படி பரபரப்புடன் தான் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்குமா? கார்த்திக் சரியான நேரத்தில் ஏர்போர்ட்டை வருவாரா? என்ற பல பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.