📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 12, 2026 07:02 AM

எல்&டி தரவு மைய வணிகம்: துணை நிறுவனம் வசம் ஒப்படைப்பு

எல்&டி தரவு மைய வணிகம்: துணை நிறுவனம் வசம் ஒப்படைப்பு

எல்&டி தரவு மைய வணிகம்: துணை நிறுவனம் வசம் ஒப்படைப்பு

இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு, பொறியியல் நிறுவனமான எல்&டி, தனது தரவு மையம் மற்றும் கிளவுட் சேவை வணிகத்தை, தனது துணை நிறுவனமான வியாமா ஏஐ நிறுவனத்துக்கு ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் மாற்றுவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் இந்த வணிகங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒட்டுமொத்தமாக வியாமா ஏஐ நிறுவனம் வசம் ஒப்படைக்கப்படும் என்று எல்&டி பங்குச்சந்தை அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ரூ.1,400 கோடி தொகைக்கு ஈடாக, தலா ரூ.100 முகமதிப்பு கொண்ட வியாமா ஏஐ பங்குகளை எல்&டி பெற்றுக்கொள்ளும்.

மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், எல்&டி நெட்வொா்க் சா்வீசஸ் நிறுவனத்தில் எல்&டி வசமுள்ள முழு பங்கையும் ரூ.30 கோடி மதிப்பில் வியாமா ஏஐ நிறுவனத்துக்கு மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் 3,200 கோடி டாலா் மதிப்பைக் கொண்ட எல்&டி, தனது ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வணிக சீரமைப்பை மேற்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.