என் வாழ்நாளில் நான் எடுத்த கடினமான முடிவு இதான்.. ஹர்திக்,வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் அதிரடி பதில்
என் வாழ்நாளில் நான் எடுத்த கடினமான முடிவு இதான்.. ஹர்திக்,வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் அதிரடி பதில்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஹர்திக் பாண்டியாவின் ஒருநாள் கிரிக்கெட் கம்பேக் குறித்து பொறுமையுடன் இருக்குமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நிலையில் ஹர்திக்கால் முழுமையாக 10 ஓவர்கள் வீச முடியாது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்போது நிதிஷ் குமார் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக பந்துவீச்சில் மெறுகேறிய அவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி 2 டி20 போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இதனால் ஹர்திக் இடத்திற்கு நிதிஷ் குமாரை ஒரு நாள் அணியில் அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கம்பீர், ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் பயிற்சி ஊழியர்கள், அவரது உடற்தகுதி முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரை அவரை அவசரமாக சர்வதேச போட்டிகளுக்குள் கொண்டு வர விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பாண்டியாவின் காயம் சார்ந்த வரலாறு காரணமாக அவரது பந்துவீச்சு பணிச்சுமை எப்போதும் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான பிரசிசினையாகவே இருந்து வருகிறது. இருப்பினும், எதிர்காலத்திற்கான ஒரு வாய்ப்பு அனைவருக்கும் உண்டு என்பதையும் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார். முழு உடற்தகுதியுடன் கூடிய பாண்டியா மற்றும் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவருமே ஒரே அணியில் இணைந்து விளையாட வாய்ப்புள்ளது என்றும், இது ஆடும் லெவனில் கூடுதல் பலத்தை சேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியாவின் கம்பேக் குறித்து பேசிய கௌதம் கம்பீர் "ஹர்திக் பாண்டியாவால் தற்போது 10 ஓவர்கள் வீச முடியாது. அவரை அவசரமாக சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழைக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு தகுதியைப் பெறும்போது, அவரும் நிதிஷும் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
ஒருநாள், டெஸ்ட் போட்டியின் கேப்டனான சுப்மன் கில் உண்மையிலே பாவம் என்றும், அவருக்கு இதுவரை ஒரு முறை கூட முழு பலத்துடன் கூடிய அணி கிடைக்கவில்லை என்றும் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார். சஞ்சு சாம்சனை நான் இங்கிலாந்து தொடரில் நீக்கியது தான் என் பயிற்சியாளர் கேரியல் நான் எடுத்த கடினமான முடிவு என்றும், வைபவ் சூர்யவன்ஷி தன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.