📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 05:01 PM

எங்கள் தலைவரே சாட்சி..!

எங்கள் தலைவரே சாட்சி..!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார்.

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி தனது உரையை நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

குட்டிகதையில்..

அடுத்து இந்த தேசத்தை ஆளப்போவது யார்? என்று பெரியவர் ஒருவர் போட்டி வைத்திருக்கிறார். அதற்கு இஞைர்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அங்கு வந்த இளைஞர்கள் பெரியவரிடம் விதிமுறைகள் குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டனர்.

விதிமுறைகள் எல்லாம் கேட்ட பிறகு, அந்த பெரியவர், அனைவருக்கும் ஒரு விதையை கொடுத்தார். அப்போது, நீங்கள் 3 மாதங்களுக்கு பிறகு இந்த விதையை செடியாக வளரச்செய்து வாருங்கள் என்றார்.

3 மாதம் முடிந்து, இளைஞர்கள் வந்தார்கள். செடிகள் வளர்ந்து பூக்கள் வளர்ந்த நிலையில பெரியவரிடம் வந்தார்கள்.

ஆனால் ஒருத்தர் மட்டும், ஒன்றுமே வளர முடியாத நிலையில் தொட்டியை எடுத்து வந்து கொடுத்தார். அதை பார்த்து நிறையபேர் சிரிக்கிறார்கள். நகைக்கிறார்கள்..

அப்போது, அந்த பெரியவர் சொல்கிறார். இவர் தான் வெற்றி பெற்றார் என்று சொல்கிறார். அப்போது, மற்ற இளைஞர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த வெற்றி ஒரு பெரிய கேள்விக்குறியாகிறது? எப்படி இது சாத்தியம் என்று?

அதற்கு அந்தபெரியவர் சொன்னாராம். நாம் கொடுத்தது வேகவைத்த விதை. அது ஒருபோதும் முளைக்காது.

வெற்றி அடைவதற்காக பொய் சொல்லாமல் நேர்மையாக வந்த இவரை தான் நாங்கள் தேர்வு செய்கிறோம் என்று சொன்னாராம்.

வெற்றி அடைவதற்காகபொய் சொல்லாமல் குறுக்குவழியை கடைப்பிடிக்காமல், நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி..

இவ்வாறு அவர் கூறினார்.