📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 11, 2026 09:03 AM

 என்னை கேலி செய்வீர்களா? நிதியமைச்சர் மரிய வில்சன் ஆவேசம்

 என்னை கேலி செய்வீர்களா? நிதியமைச்சர் மரிய வில்சன் ஆவேசம்

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன்: நிதி அமைச்சர் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவராக இருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்தபோது, தமிழில் பல சொற்களை பேசாமல் விட்டு விட்டார்; சிலவற்றில் இலக்கணப் பிழை இருந்தது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெகு சிறப்பாக பேசி, கட்சிக்கு பலம் சேர்க்கிறார். நிதி அமைச்சரும் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும்.

தமிழகத்தில் 33 பெரிய நதிகளில், இதுவரை மூன்று தான் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில், நதிகள் இணைப்புக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: நதிகள் இணைப்புக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் பிரபாகர்: எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசியபோது, ஒன்பது முறை 'பட்ஜெட்' என, ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். அவர், நிதிநிலை அறிக்கை என பேசியிருக்கலாம்.

அமைச்சர் ராஜ்மோகன்: அவரவர் வட்டார மொழிகளில், அமைச்சர்கள் பேசுகின்றனர். எம்.எல்.ஏ.,வும் 'ஊடல' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

அமைச்சர் மரிய வில்சன்: கூடைப்பந்து விளையாட்டு வீரரான எனக்கு தடுப்பாட்டம், தாக்குதல் ஆட்டம் என, இரண்டும் ஆடத் தெரியும். உருவ கேலி, ஜாதி, மொழி ரீதியாக கேலி செய்வீர்களா. நான் இப்படி தான் பேசுவேன். என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என்னை கேலி செய்வீர்களா.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தி.மு.க., ஆட்சியில், நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன், ஆங்கிலத்தில் பேசினார்.

எதிர்க்கட்சியில் இருந்த அ.தி.மு.க., அவற்றை விமர்சிக்கவில்லை. அமைச்சர் ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவர், புதுச்சேரி, கடலுார் வட்டார மொழிகளில் தான் பேசுவார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு: ராஜேந்திரன் சபையில் புதிதாக பேசுகிறார். இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்.

சபாநாயகர் பிரபாகர்: சபையில் தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளிலும் பேசலாம்.

இவ்வாறு விவாதம் முடிந்தது.

விவாதத்தின்போது, நிதி அமைச்சர் மரிய வில்சன் மிகவும் ஆவேசத்துடன் பேச, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவரை சமாதானப்படுத்தினார்.