📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 23, 2026 10:30 PM

Gold and silver rate today : குஷியோ குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய நிலவரம் இதோ..

Gold and silver rate today : குஷியோ குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய நிலவரம் இதோ..

Gold and silver rate today : குஷியோ குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய நிலவரம் இதோ..

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. 60ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சவரன் விற்ற நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1.34 லட்சத்தை எட்டியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக அமெரிக்க டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தனர். இதனால் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டது.

இந்தநிலையில் ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தங்கம் விலையானது குறைய தொடங்கியது. தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியதே காரணம் என முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து தங்கம் விலையானது ஏறி இறங்கி வருகிறது.

தங்கம் விலை நிலவரம்

18-ம் தேதி தங்கம் ஒரு கிராம் தங்கம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனை.19-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை20-ம் தேதி கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.21-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை22-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், இன்றும் குறைந்தும் நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.