GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- அதிரடியாக சரிந்தது தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை என்ன.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலை ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையானது எதிர்பாராத வகையில் கடந்த சில ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கத்தின் விலை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அலறவிட்டது. மேலும் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் மத்திய வங்கிகள் அதிகளவு முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலையானது அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை.?

தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 13,820 ரூபாய்க்கும், சவரனுக்கு 1440 ரூபாய் குறைந்து 1,10,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளியின் விலை கடந்த 2 நாட்களாக உயராமல் இருந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும்,கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.