📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 03:36 PM

GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும்

GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும்

GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் குஷியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகவே எதிர்பாரா திருப்பமாக தங்கம் விலை சரிந்து வருகிறது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டாலருக்கு பதிலாக தங்களது நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தது. இதனால் தங்கம் விலை தினந்தோறும் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தலைகீழ் மாற்றமாக கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது. இதற்கு பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், பிளாக் மார்க்கெட்டில் தங்கத்தை வாங்க ஆள் இல்லாத நிலை இருப்பதாகவும், மேலும் கையில் ரொக்க பணமாக இல்லாத நிலை இருப்பதால் தங்கத்தின் விலை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் தங்கம் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் எந்த நேரத்திலும் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளனர்.

5 நாட்களில் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 5,500 ரூபாய் அளவிற்கு குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது சரிந்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 14.960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரை இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2.90 லட்சத்திற்கும் விற்பனயாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் 6500 ரூபாய் வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களை குஷியில் துள்ளிக்குதிக்க வைத்துள்ளது.