Gold And Silver Rate Today: விடாமல் உயரும் தங்கம்.. ஒரே நாளில் இவ்வளவா.!! 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்த
Gold And Silver Rate Today: விடாமல் உயரும் தங்கம்.. ஒரே நாளில் இவ்வளவா.!! 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்த வெள்ளி விலை
Gold Rate Today: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை சந்தித்துள்ளது.
ஏறி இறங்கும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது ஒவ்வொரு வாரமும் புதிய புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சவரன் புதிய உச்சமாக 1.34 லட்சம் என்ற புதிய மைல்கல்லை தொட்டது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறி இறங்கி வருகிறது. தங்கம் விலை உயர்விற்கு காரணமாக கூறப்படுவது போர் பதற்றங்கள் முக்கியமாக உள்ளது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என பல நாடுகள் முடிவெடுத்து அதிகளவு தங்கத்தை வாங்கி குவிப்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14ஆயிரத்து 650 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்று 15 ரூபாய் அதிரித்து 300 ரூபாக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாயை மீண்டும் எட்டியுள்ளது.