Gold and silver rate today : திடீர் பல்டி.! 2,560 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு
Gold and silver rate today : திடீர் பல்டி.! 2,560 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு குஷியான நியூஸ்

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது 3 நாட்களில் 8ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், திடீரென 2,560 ரூபாய் குறைந்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தை போட்டி போட்டு மக்கள் வாங்கி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் ஒரு சவரன் 1,34 லட்சத்திற்கு விற்பனையானது. இதற்கிடையே ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக மீண்டும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், திடீரென விலையானது குறைந்தது. கச்சா எண்ணெய் மீது முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இதனையடுத்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த அடுத்த நிமிடம் முதல் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 8,000 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிதது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1.09,360 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாலையில் தங்கத்தின் விலையானது திடீரென குறைந்துள்ளது. கிராமுக்கு 320 ரூபாய் குறைந்து 13,350 ரூபாய்க்கும், சவரனுக்கு 2560 ரூபாய் குறைந்து 1,06,800 விற்பனையாகிறது.