📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 10:00 PM

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! குறைந்தது தங்க நகை விலை

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! குறைந்தது தங்க நகை விலை

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! குறைந்தது தங்க நகை விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விசேஷ நாட்களில் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி குவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையானது பல மடங்கு அதிகரித்து வருகிறது. டாலர் மதிப்பிற்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கியதால் தங்கம் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.

ஈரான்- இஸ்ரேல் போர்

இந்த சூழ்நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பினார்கள். இதனால் தங்கம் விலையானது சற்று சரிய தொடங்கியது. 1.34 லட்சத்தை ஜனவரி மாதம் எட்டிய தங்கம் விலை பிப்ரவரி மாதம் இறுதியில் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதனையடுத்து போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று உயர்ந்திருந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.