Gold and silver rate today : தங்கத்தின் விலை திடீர் உயர்வு.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை
Gold and silver rate today : தங்கத்தின் விலை திடீர் உயர்வு.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இதில் முக்கியமாக மத்திய வங்கிகள் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்கி குவிப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் தங்கம் விலை உயர்விற்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏறி இறங்கும் விலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்திய தங்கம் விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.