📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 05:00 PM

Gold and silver rate today : திடீரென 5,000 ரூபாய் அதிகரிப்பு.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு

Gold and silver rate today : திடீரென 5,000 ரூபாய் அதிகரிப்பு.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு

Gold and silver rate today : திடீரென 5,000 ரூபாய் அதிகரிப்பு.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை நிலவரம் என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. எனவே திருமண நிகழ்வுகள், விஷேச காலங்களில் தங்க நகைகளானது முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டமானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2026ஆம் ஆண்டு நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையானது.

போர் பதற்றம்- திடீரென குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஈரான்- அமெரிக்கா போரால் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பதாக தங்கம் விலை குறைய தொடங்கியது. இதற்கு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்தது காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து போர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

நேற்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், இன்று திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 125 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,000 ரூபாய் அதிகரித்து 1,13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது.கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.