📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 25, 2026 01:30 PM

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு 8,560 ரூபாய் அதிகரிப்பு.! வெள்ளிக்கு 30ஆயிரம் உயர்ந்தது-

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு 8,560 ரூபாய் அதிகரிப்பு.! வெள்ளிக்கு 30ஆயிரம் உயர்ந்தது-

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு 8,560 ரூபாய் அதிகரிப்பு.! வெள்ளிக்கு 30ஆயிரம் உயர்ந்தது- நகைப்பிரியர்கள் ஷாக்

Gold and silver rate today : தங்கத்தின் மீதான விலை நேற்று அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் மீதான விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு 30ஆயிரம் முதல் 35 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அடுத்த6 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை 34ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக திருமணம், தீபாவளி, பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்பிடிக்கும்.

போர் பதற்றம்- பாதிக்கப்படும் உலக நாடுகள்

இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மையானது நீடித்து வந்தது. இதனால் தங்கத்தின் விலை ஏறி இறங்கி வந்தது. இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் ஹர்மூஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையானது நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய மக்கள் தங்க நகைகளை ஒரு வருடத்திற்கு வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தங்கத்தின் மீதான வரி உயர்வு

இதனால் தங்க வணிகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இந்திய மக்களுக்கு ஷாக் கொடுத்தது. அந்த வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய உத்தரவால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 1,070 ரூபாய் உயர்ந்து 15,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 8,560 ரூபாய் அதிகரித்து 1,23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது நேற்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோ பார் வெள்ளிக்கு 15ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 330 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 30ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.