📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 21, 2026 07:32 AM

GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நேற்று வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்திருந்தது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்தும், வெள்ளியின் விலை குறைந்து விற்பனையாகிறது.

வரலாறு காணாத விலையில் தங்கம்

தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கு ஏற்ப தங்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர், 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது புதிய உச்சமாக 1.34 லட்சத்தை எட்டியது. அதே நேரம் தற்போது தங்கம் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்களால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

ஏறி இறங்கும் தங்கம் விலை

இதன் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 14,420 ரூபாய்க்கும், சவரனுக்கு 540 ரூபாய் குறைந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 21ஆம் தேதி கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து 14,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து 1,17,440 ரூபாய்க்கு விற்பனையானது. இதனையடுத்து நேற்று வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதிரடியாக தங்கத்தின் விலையானது உயர்ந்தது.

கிராம் 180 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்தது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

இன்று தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14890 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளியின் விலை சரிவை சந்தித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாயக்கும், ஒருகிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி