📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 27, 2026 03:32 PM

Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம்,

Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம்,

Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் எதிர்பாராத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி தலை சுற்ற வைத்தது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது.

தங்கம் விலை - ஏறி இறங்க காரணம் என்ன.?

கடந்த 2 மாதங்களாக ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகிவருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக அதிகளவு கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்ததால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இதனால் தங்கத்தின் விலையானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,06,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 240 ரூபாய்க்கும், கிலோ பார்வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி