📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 15, 2026 10:02 AM

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வாரத்தின் இறுதி நாளான இன்றும் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மீண்டும் உயரும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 2 ஆண்டில் மட்டும் புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய உச்சமான 1.34 லட்சத்தை ஒரு சவரன் எட்டியது. எனவே இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு 2 லட்சத்தை எட்டும் என நகைவியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்திற்கு பதிலாக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை அதிகரித்த காரணத்தால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

அந்த வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது அடுத்த ஒரு சில மாதங்களில் அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஈரான்- அமெரிக்கா இடையே போர் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலையானது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

எகிறும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நேற்று காலையில் இறங்கிய நிலையில் மாலையில் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி