Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 3,280 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தில் தொடரும் முதலீடு
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அடுத்த 3 வருடங்களில் பல மடங்கு தங்கத்தின் விலையானது உயர்ந்தது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது அடுத்த 6 மாதத்தில் 2 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டது.
குறையும் தங்கம் விலை- காரணம் என்ன.?
ஆனால் திடீர் மாற்றமாக தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிகளவு கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யப்படாத காரணத்தால் தங்கத்தின் விலையானது குறைந்து வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் தங்க நகை நிலவரம்
இன்றைய தங்கம் விலை என்ன.?
ஜூன் 8ஆம் தேதியான இன்று தங்கம் கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி