Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,680 சரிந்தது தங்கம் விலை.! 3 நாளில் தலைகீழ் மாற்றம்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,680 சரிந்தது தங்கம் விலை.! 3 நாளில் தலைகீழ் மாற்றம்- வெள்ளி விலையும் குறைந்தது
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு 2,000 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது.
குறைந்த தங்கம் விலை
ஜீன் 20ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனை.ஜூன் 21 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லைஜூன் 22 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லைஜூன் 23 ஆம் தேதி கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 108,440 ரூபாய்க்கு விற்பனை ஜூன் 24 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13,350 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் சரிந்து 1,06,800 ரூபாய்க்கு விற்பனை.
தங்கத்தின் விலையானது கடந்த 2 நாட்களில் மட்டும் 2 ஆயிரம் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிரடியாக சரிந்தது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய் குறைந்து 13,140 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 05 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3680 ரூபாய் குறைந்து நகைப்பிரயிர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 230 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் சரிந்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி