📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 25, 2026 07:32 PM

Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.??

Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.??

Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்திய நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களாக பல மடங்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஒரு சவரன் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் என்ற அளவில் விற்பனையான தங்கத்தின் விலையனது கடந்த 2 - 3 வருடங்களில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி அதிரவைத்தது.

ஆனால் அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது குறைந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்தனர். இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது.

ஏறி இறங்கிய தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக சிறுக, சிறுக உயர்ந்து வந்த நிலையில், திடீரென நேற்று அதிரடியாக சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியாக்கியுள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,6,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி