📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 05:00 PM

Gold and silver rate today : ரூ. 5,000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய தங்கம்,

Gold and silver rate today : ரூ. 5,000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய தங்கம்,

Gold and silver rate today : ரூ. 5,000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையானது கிலோவிற்கு ரூ. 5000 குறைந்துள்ளது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகளவில் உள்ளது. அந்த வகையில் திருமண நிகழ்வுகள், பண்டிகை காலங்களில் தங்கத்திற்கு முக்கியத்தவும் கொடுத்து அதிகளவு வாங்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் தங்க நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது அதே நேரம் சிறுக சிறுக பணத்தை சேகரித்து தங்க நகைகளை வாங்க திட்டமிடும் நடுத்தர வர்க்க மக்கள் தங்க நகைக்கடைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கத்தை ஒரு வருடத்திற்கு வாங்காதீங்க

அந்த வகையில் கடந்த 5 வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிலும் தற்போது வளைகுடா நாடுகளில் பதற்றமான நிலை நீடித்து வருவதால் கச்சா எண்ணெய், எல்பிஜி வருவது பெரிய அளவில் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் மக்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டாம் எனவும் ஒரு வருடத்திற்கு தங்க நகைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த தினமே தங்கம் இறக்குமதி வரியை 15% உயர்ந்தி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் 2 லட்சம் ரூபாயை எட்டும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திடீரென உயர்ந்த தங்கம் விலை

இதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது நேற்று காலை சவரனுக்கு அதிரடியாக 8,560 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமிற்கு 30 ரூபாய் விலை உயர்ந்தது. ஆனால் மாலையில் திடீர் திருப்பதாக தங்கம் விலை சவரனுக்கு 3200 ரூபாயும் வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்தது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.