📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 28, 2026 03:00 AM

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு-

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு-

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் திடீரென உயர தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. எனவே தங்கத்தின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் நகைப்பிரியர்கள் அலறி துடித்த நிலையில் தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைய தொடங்கியது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 1 லட்சத்தி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியது. இத்கு முக்கிய காரணமாக ஈரான் மீதான போரை அமெரிக்க 5 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தவர்கள் உடனடியாக தங்கத்தின் மீது தங்களது பார்வையை திருப்பினார்கள். இதனால் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

தங்கம் விலை நிலவரம்

பிப்ரவரி 20- சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.பிப்ரவரி 21- ஒரு சவரன் 2640 ரூபாய் குறைந்து 1,08,960 ரூபாய்க்கு விற்பனை.பிப்ரவரி 22- சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை பிப்ரவரி 23- சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தது. ஒரே நாளில் 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்தது. இரவு 7 மணியளவில் திடீரென தங்கம் விலை உயர்ந்தது.பிப்ரவரி 24- காலையில் 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சவரனுக்கு 2,000 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்பனைபிப்ரவரி 25- சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை என்ன.?

ஈரான் நாட்டிற்கு எதிராக 5 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த அடுத்த நிமிடம் முதல் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 8000 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1.09,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.