📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 04:00 PM

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ரூ.10,000 உயர்வு

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ரூ.10,000 உயர்வு

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ரூ.10,000 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கம் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் எப்போதும் குறைவதில்லை, அதற்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீபாவளி, திருமணம், பிறந்தநாள் என முக்கிய நிகழ்வுகளில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்க நகை எட்டியது.

தங்கம் விலை உயர்வு காரணம்.?

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக பங்கு சந்தையில் நிலையற்ற தன்மையானது நீடித்து வருகிறது. இதனால் அங்கு முதலீடு செய்வது சரியான நிலையில் இருக்காது என்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். அடுத்தாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் தங்கத்தை அதிகளவு மத்திய வங்கிகள் வாங்கியதும் தங்க நகை விலை உயர்விற்கு காரணமாக கூறப்பட்டது.

அடுத்ததாக தங்க நகைகளை அடுத்த ஒரு வருடத்திற்கு வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி இந்திய மக்களிடம் கேட்டுகொண்டார். இந்த நிலையில் தங்க நகை ஆபரணங்கள் இறக்குமதி வரியாக 15% விதிக்கப்பட்டதால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியில் குறைந்து வந்த நி்லையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி கடந்த வாரம் இறுதியில் விற்பனையான கிராம் 14,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.