Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு
போட்டி போட்டு தங்கம் வாங்கும் மக்கள்
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் எப்போதும் அலைமோதி வருகிறது. அந்த வகையில், இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. எனவே தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்க வருகிறார்கள். மேலும் தங்கம் எதிர்கால சேமிப்பாக இருப்பதாலும் தங்கத்தை தங்களால் முடிந்த அளவு மக்கள் வாங்கி வருகிறார்கள்.
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை ஷாக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி