📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 07, 2026 11:32 AM

Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு

Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு

Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சிறுக, சிறுக தங்கம் விலையானது சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தை விரும்பும் இந்திய மக்கள்

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே தங்க நகைகளை வாங்க மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே அதிகமாக விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்திய திருமண நிகழ்வுகளில் தங்கம் முக்கிய தேவையாக உள்ளது. அதிலும் தங்களது குழந்தைகளுக்கு எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் பார்த்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவு தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 முதல் 6 வருடங்களில் சரசரவென உயர்ந்து நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 முதல் 35 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், தற்போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. அதே நேரம் அடுத்தடுத்து உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலையானது தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் முதல் 1லட்சத்து 15 ஆயிரம் என்ற அளவில் ஏறி இறங்கி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா- ஈரான் போரால் கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலையானது குறைந்து வந்தது. தற்போது தங்கதின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய் உயர்ந்து 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், சவரனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி